கடலூரில் தேமுதிகவினர் சாலை மறியல்
மின்கட்டண உயர்வை கண்டித்து கடலூரில் தேமுதிகவினர் சாலை மறியல்
கடலூர்,
மின் கட்டண உயர்வை கண்டித்தும், உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்தும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் திடீரென பாரதி சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் பாரதி சாலையில் சுமார் ¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.