வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-31 18:45 GMT

விருத்தாசலம்,

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன்பு வாழை இலையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டக் குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜசேகர், பீர்முகமது, பிரகாஷ், மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டீபன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் நகரம் முழுவதும் உள்ள அனைத்து உணவகத்திலும் பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலையை பயன்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விருத்தாசலம் ஆலடி ரோட்டில் நீர்நிலை புறம்போக்கில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாழை இலையை கைகளில் ஏந்தியபடி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்