கர்ப்பிணி சாவு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கர்ப்பிணி சாவு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-10 18:45 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புகழேந்தி(வயது 32). கூலி தொழிலாளியான இவருக்கும், கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி (என்கிற) நிர்மலா (26) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்துள்ளது. இதில் கருவுற்ற நிர்மலாவுக்கு 9-வது மாத வளைகாப்பு செய்ய பெண்ணின் வீட்டார் முடிவெடுத்த நிலையில், கடந்த 2-ந் தேதி நள்ளிரவு வீட்டின் மாடியில் நிர்மலா எரிந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் புகழேந்தி மற்றும் அவரது தாய் அமுதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிர்மலா சாவு குறித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் பெற்றோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்ட செயலாளர் டி.அம்பிகா, இந்திய வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.அருணன், மாவட்ட பொருளாளர் அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் உறவினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்