பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
கிணத்துக்கடவு தீயணைப்புத்துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தீயணைப்புத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பருவ மழையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பருவ மழையின் போது மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் தீயணைப்பு துறையினர் பருவமழையின் போது மாணவர்கள் தெரியாத நீர்நிலைகளில் இறங்கி குளிக்க கூடாது. மின் கம்பி அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழை நேரத்தில் காற்று, இடி, மின்னல் ஏற்படும் போது மரத்தின் கீழ் நிற்க கூடாது என்று அறிவுரை வழங்கினர்.