பிதிர்காட்டில் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பிதிர்காட்டில் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-14 19:00 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே பிதிர்காட்டில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுயானைகள் மற்றும் வன விலங்குகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனபகுதியை ஒட்டி 5 மீட்டர் ஆழத்திலும் 3 மீட்டர் அகலத்திலும் அகழி வெட்டி மின் வேலி அமைக்கவேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பந்தலூர் வட்டார தலைவர் ரவி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கோஷி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாதன், கூடலூர் வட்டார தலைவர் ஹம்சா, நெலாக்கோட்டை ஊராட்சி பகுதி தலைவர் ஜோஸ்குட்டி, நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி, கூடலூர் நகரமன்ற துணைத்தலைவர் சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்