அரசு விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு விடுதி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-13 20:00 GMT

அரசு விடுதி மாணவர்களுக்கு உணவுப்படியை அதிகரிக்க கோரியும், தரமான உணவு வழங்க கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ஹரிபிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சூரியா, துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி வைரவளவன் போராட்டத்தை விளக்கி பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அரசு விடுதி மாணவர்களுக்கு உணவுப்படியை அதிகரிக்க கோரி ஆயிரக்கணக்கான மாணவர்களை திரட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்