மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-16 18:06 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் சார்பாக திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன், இளைஞர் பெருமன்ற மாநில செயலாளர் பா.தினேஷ் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.வேணுகோபால் டி.ராஜா, எம்.சி.முருகன், எம்.பூபதி உள்பட பலர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்புஷன் சரண் சிங்கை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜீவா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்