விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-05-28 18:42 GMT

ஜெயங்கொண்டம்:

விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் இலக்கியதாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ராஜாபெரியசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்