மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விடும் முடிவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயாரிப்பதை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விடும் முடிவை ரத்து செய்யக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி தயாரிப்பதை மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விடும் முடிவை ரத்து செய்யக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின்படி உணவு தயாரிப்பதை மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் கொடுக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் அமைப்பாளர்கள் மூலம் காலை சிற்றுண்டி தயாரித்து வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
கோஷங்கள்
சத்துணவு அமைப்பாளர் ஓய்வு ஊதியம் குறைந்தபட்சம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயது 60 என்பதை 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாவட்ட செயலாளர் சாந்தி, மாநில செயற்குழுவை சோ்ந்த ரேணுகா, மாவட்ட பொருளாளர் கவிதா, ஓய்வூதிய சங்க பொறுப்பாளர்கள் பீமாராவ், ராஜேந்திரன், கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.