ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆயக்காரன்புலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.;
வாய்மேடு:
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை விதிக்கும் மசோதாவை கவர்னர் அனுமதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும், ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை விதிக்க கோரியும் ஆயக்காரன்புலம் கடைத்தெருவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய தலைவர் பாலகுரு, செயலாளர் பழனியப்பன், பொருளாளர் சத்தி பாலன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.