தீத்தடுப்பு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தீத்தடுப்பு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தீத்தடுப்பு குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி கீழ்வேளூர் தீயணைப்பு துறை சார்பில் நடந்தது. இதில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபடும் போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பு தொழிலாளர்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைவழங்கினர். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்பையன், சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜசோழன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.