மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், தாலுகா செயலாளர் காசி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
இதில் தமிழக அரசின் உதவித் தொகையை நம்பி வாழ்ந்து வரும் அதிக உடல் ஊனம் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஐந்து மாதகாலமாக உதவித் தொகை வழங்காததை கண்டித்தும், உடனடியாக உதவித் தொகை வழங்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். ரங்கன், ரஹமான், ஈசாக், சிங்காரம், கரிசித்தன், கேசவன், ஜோதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.