விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சோளிங்கரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-04 13:52 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரம் மற்றும் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்தை கண்டித்து சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் நற்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் நன்மாறன், ஒன்றிய செயலாளர் சவுந்தர், நகர செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அவரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அர்ஜூன் சம்பத்தின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை‌ போலீசார் தடுத்து நிறுத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கோபி, தினகரன், விடுதலை, எஸ்.கோபி, முரளி, பிரபு, ரகு, சாமு, சவுந்தர், தனஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்