ஆரணியில் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-08 14:14 GMT

ஆரணி

ஆரணியில் ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஆரணி வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வட்டக்கிளை தலைவர் ஆர்.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார். ''பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் படி கற்பித்தல் பணிகளை ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருவது ஆசிரியர்களின் செயல்களை அவமதிக்கும் இழிவுபடுத்தும் செயலாகும்'' எனக்கூறி அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி உள்பட ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில் பொருளாளர் ஆஷா தேவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்