மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக பிரகாரம் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான தரிசன பாதையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் ஆகம விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் கோவில் இணை ஆணையரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க, காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டு, இந்து மக்கள் கட்சி, யாத்திரை பணியாளர்கள், அக்னி தீர்த்த கடற்கரை புரோகிதர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.