விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதம், உயிர்சேதம் தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் துளசிநாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுவாமிநாதன், கேசவன், ரவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காட்டு பன்றிகளை அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர் சேதத்திற்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும், மனித விலங்குகளால் ஏற்படும் உயிர் இழப்புக்கு இழப்பீட்டு தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் ரங்கன் நன்றி கூறினார்.