மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுவரும் மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர்.
மனிதாபிமான மற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.