அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-16 17:26 GMT

குடியாத்தம் தாலுகா அனைத்து கிறிஸ்தவ சபைகள் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இனப்படுகொலை, தேவாலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்கி, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதை கண்டித்து குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிஷப் ஜி.கிளாரன்ஸ், போதகர்கள் ஏ.மணிமைக்கேல், சி.தாஸ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன், நகர தி.மு.க. துணை செயலாளர் ம.மனோஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி கே.சாமிநாதன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஒன்றிய தலைவர் ஷாபுதீன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் விஜயன், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட பொருளாளர் குட்டிவெங்கடேசன், போதகர் ஆக்டேவியஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், கிறிஸ்தவ சபை உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் படுகொலைகளை கண்டித்தும், தேவாலயங்கள், வீடுகள் தீக்கிரையாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்