அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்திற்கு முன்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்திற்கு முன்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் பாபு தலைமை தாங்கினார்.மகாத்மா காந்தி, திருவள்ளுவர் உருவப்படங்களை அனுமதிக்கும் போது சட்டமேதை அம்பேத்கரின் படத்தை மட்டும் அகற்றும் நோக்கத்தில் ஐகோர்ட்டு பதிவாளர் சுற்றறிக்கை உள்ளதாகவும் அதனை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும, மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் இதில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இருதினங்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நித்தியானந்தம், செயலாளர் ஜான் சாலமன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வாலாஜா வழக்கறிஞர் சங்கத் தலைவர் இளங்கோவன், செயலாளர் செந்தில்குமார், ஆற்காடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.