திடக்கழிவு மேலாண்மை செயல்விளக்கம்
சிவகிரி பள்ளியில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பள்ளியில் சேகரிக்கும் குப்பைகளை பள்ளியின் வளாகத்தில் குப்பை கிடங்கு ஏற்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் சிவகிரி நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட உரப்பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை இயற்கை உரங்கள் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும், இதனால் ஏற்படக்கூடிய விவசாய உற்பத்தி குறித்தும் நகர பஞ்சாயத்துதலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் எடுத்துரைத்தனர். நகர பஞ்சாயத்து துணைத் தலைவர் லட்சுமி ராமன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், வரிவிதிப்பு குழு உறுப்பினர் செந்தில்வேல், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, மருதவள்ளி முருகன், ரத்தினராஜ், முத்துலட்சுமி, தலைமை எழுத்தர் தங்கராஜ், மாடசாமி, சக்திவேல், குமார், தினேஷ் குமார், லாசர் எட்வின் ராஜாசிங், செல்லப்பன், மேஸ்திரி இசக்கி மற்றும் தூய்மை பணியாளர்கள், விவேகா மெட்ரிகுலேசன் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.