நெற்பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து செயல்விளக்கம்

சங்கரன்கோவில் அருகே நெற்பயிரில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.

Update: 2023-01-13 18:45 GMT

சங்கரன்கோவில்:

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர். சங்கரன்கோவில் வேளாண் உதவி இயக்குனர் ராமர், துணை வேளாண் அலுவலர் வைத்தியலிங்கம், வேளாண் அலுவலர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர் கார்த்திக்குமார் ஆகியோர் மாணவிகளை வழிநடத்தி வருகின்றனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிரியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோர் பருவக்குடி கிராமத்தில் நெற்பயிரில் டிேரான் மூலம் நானோ யூரியா தெளிப்பதை செயல்முறை விளக்கமாக நயோனிட்ரோன் கம்பெனியின் மூலமாக சதீஷ், சின்னதுரை ஆகியோர் உதவியுடன் செய்து காட்டினர். இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்து டிரோன் பயன்பாடு பற்றி அறிந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்