மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் கட்டண உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாமக்கல் தெற்கு, வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், விஜய சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அவை தலைவர்கள் ராஜ்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பி.கே.குமார், மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் சுல்தான் பாஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின்கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நாமக்கல் வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், மகாலிங்கம், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அங்கமுத்து, மாவட்ட நெசவாளர் அணி துணை செயலாளர்கள் ரமேஷ்குமார், முனியப்பன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.