ஜனநாயக மாதர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-01 18:16 GMT

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடை வீதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் பத்மாவதி கண்டன உரையாற்றினார். அப்போது மாதர் சங்க நிர்வாகிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்