ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.;
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் பி.எம்.டி. அறக்கட்டளை மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கினார். மாநகர தலைவர் அங்குசாமி முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை கலங்கப்படுத்தியதைக் கண்டித்தும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் இசக்கிராஜ், மாவட்ட செயலாளர் சங்கிலி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆதி தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.