சிவகங்கையில் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்

ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் சிவகங்கையில் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் என மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்

Update: 2023-07-29 19:00 GMT

காரைக்குடி 

சிவகங்கை நகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை கொள்ளை, வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் இதனை வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்