மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-04 18:45 GMT

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், துணைச்செயலாளர் நாராயணன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில், கடந்த சில நாட்களாக வேதாரண்யம் தாலுகாவில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. உடனடியாக அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரணம் வழங்காவிட்டால் வருகிற 7-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்