துரித விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் துரித விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-01 18:17 GMT

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் டி.ஆர்.முரளி தலைமை தாங்கினார். மாநகர் செயலாளர் அப்புபால்பாலாஜி, புறநகர் மாவட்ட செயலாளர் கோதண்டன், அவைத் தலைவர் தவசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர கோரி கோஷங்களை எழுப்பினர்.

இதில் கே.வி.குப்பம் தொகுதி செயலாளர் ரவி மற்றும் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த ஏ.எஸ்.ராஜா, சதீஷ், ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்