மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி அருகே மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-20 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தாலுகா தும்பூர் கிராமத்தில் மாவட்ட அட்டவணை இனத்தவர் மற்றும் பழங்குடியினர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தும்பூரில் 1996-ம் ஆண்டில் 176 பேருக்கு கையகப்படுத்தப்பட்ட மனைப்பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், உடனடியாக பட்டா வழங்க கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.சி., எஸ்.டி., பெடரேஷன் அமைப்பாளர் தனசேகரன் தலைமை தாங்கினார். பகுஜன் சமாஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர் கோவிந்தன், மகளிர் பிரிவு புவனேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தும்பூர் நேரு மகளிர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்