சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோிவில்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி நெடுஞ்சாலை லட்சுமி மில் மேம்பாலம் முதல் ரெயில் நிலையம் மேம்பாலம் வரை மெயின் ரோடு, புது ரோடு, கடலையூர் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, பசுவந்தனை ரோடு, மந்தித் தோப்பு ரோடு பகுதிகளில், இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் உதவி கலெக்டர் அலுலகத்தில் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.