பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்கக் கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-05 18:06 GMT

பொங்கல் பரிசு ெதாகுப்புடன் தேங்காய் வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் எஸ்.என்.ஜானகிராமன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் என்.புருஷோத்தமன், வி.கே. பிச்சாண்டி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.வேலு வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இலவச தேங்காய்களை வழங்கி பேசினார். மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க கோரியும், தென்னை விவசாயிகளை காப்பாற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் அன்பழகன், பொதுச் செயலாளர் கவியரசு, ஈஸ்வர், தண்டாயுதபாணி, விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் கே.கே. மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு தொழில் பிரிவு நாகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்