அழகியமண்டபத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

அழகியமண்டபத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-11 18:36 GMT

திருவட்டார், 

அழகியமண்டபத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

ஆர்ப்பாட்டம்

அழகியமண்டபம் சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அழகியமண்டபத்தில் காட்டாத் துறை ஊராட்சி தலைவர் இசையாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஜெபதாஸ், விலவூர் பேரூராட்சி துணை தலைவர் ஞான ஜெபின், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஷர்மிளா ஏஞ்சல், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஜாகிர் உசேன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்