ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க ஆன்லைன் டோக்கன் முறையில் அனுமதி பெற வேண்டும். இந்த ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் அணி பேரவை சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் சிவா தலைமை தாங்கினார். இதில் காளைகள் வளர்ப்பவர்கள் மற்றும் பேரவையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்த கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.