குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா பிலிப்பட்டியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சிக்கு விளையாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி 4 மாணவிகள் இறந்தனர். இறந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு அப்போது தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க கோரி நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் இறந்த மாணவிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.