இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-18 21:09 GMT

பொன்மலைப்பட்டி:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் கிளை செயலாளர் தவ்பிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் செயல்படுவதாக கூறி, அவரை இடமாற்றம் செய்து, துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்கள் சார்பில் நேற்று காலை அரியமங்கலம் போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்