பா.ஜ.க.வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைந்த இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க.வினரை கண்டித்தும், அவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அனஸ் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.