கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
சங்கராபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிஷா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, தீபா, ஜெயலட்சுமி, சண்முகபிரியா, பாரதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.