கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவட்டாரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்;
திருவட்டார்,
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை வெட்டி கொலை செய்ததை கண்டித்து திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவட்டார் வட்ட செயலாளர் ஜெகன் அருள், திருவட்டார் வட்ட கிராம உதவியாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் ஜோஸ் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.