கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு, சோளிங்கர், நெமிலி, அரக்கோணத்தில் கிராமநிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 18:22 GMT

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆற்காடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்காடு வட்ட கிளை தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனே வழங்கவேண்டும், பட்டப்படிப்பு ஊக்க ஊதியம் மீண்டும் வழங்வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உள்வட்ட தலைவர் கிரண்குமார் நன்றி கூறினார்.

சோளிங்கர்

சோளிங்கர் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் சானு தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத்துக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கணேஷ் நன்றி கூறினார்.

நெமிலி தாலுகா அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நெமிலி வட்ட செயலாளர் டோமேசான், துணைத்தலைவர் ரகு, துணைச்செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷமிட்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் தணிகாசலம், மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டத் தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்