கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-13 17:58 GMT

மணப்பாறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், நிறுத்திவைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும். ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் திரளான கிராமநிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்