கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-03-13 19:00 GMT

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரியகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமர், மாவட்ட பொருளாளர் மதுக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தவறாக பேசி வரும் தாசில்தாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் காளிதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் மகேந்திரன், பெரியகுளம் தாலுகா தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்