ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-06-06 18:45 GMT

மயிலாடுதுறையில், டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்ய வேண்டும், நீதிக்கேட்டு போராடிவரும் மல்யுத்த வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் அங்கம் வகிக்கும் விவசாய அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்