திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக கூறி திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-16 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களிடம் அரசு நிர்ணயிக்கின்ற கட்டணத்தை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் மாணவ-மாணவிகள் கல்லூரி வாசலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்