கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-14 18:55 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயலாளர் தங்க. காசிநாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இயற்கை விவசாயி ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை மீண்டும் இயக்குவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள குழுவில் விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் குணசேகரன், மோகன்ராஜ், காமராஜ், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்