செய்யாறு உதவி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு உதவி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-17 14:32 GMT

செய்யாறு

செய்யாறு உதவி கலெக்டரை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் கோ.ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் எம்.சுரேஷ் பாபு, எம்.ராஜசேகரன், ப.துளசிராமன், ஆர்.சுப்பிரமணி, ஜி.தரணிகுமார், பிரேம்நாத், ஆர்.ஜீவா, சிவக்குமார், ஏ.ரமேஷ், கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் செய்யாறு உதவி கலெக்டர் ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கூறி கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த் துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்