மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை:
தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு கோர்ட்டு உத்தரவுப்படி காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மக்கள் நலப்பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் நெல்லை கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.