மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-28 15:00 GMT

ஊட்டி, 

இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊட்டி மார்க்கெட் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். அக்னிபத் திட்டத்தால் ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், நிர்வாகி அடையாள குட்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்