மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மயான வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-10 16:18 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லூத்துக்குழி கிராமத்தில் மயான வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நல்லூத்துக்குழியில் உள்ள மயானத்தில் போதிய இடவசதி இல்லாததால், இறந்தவர்கள் உடலை புதைக்க முடியவில்லை. ஏற்கனவே புதைத்த இடத்தில் எலும்பு கூடுகளை எடுத்து விட்டு, புதைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, போதுமான இடவசதி செய்து தர வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அன்பரசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் ஆச்சிபட்டி கிளை உறுப்பினர் பிச்சை நன்றி கூறினார். மேலும் மயான வசதி கோரி பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்