திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நெமிலியில் பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தியவர்களை கைது செய்யவேண்டும். பெண்கள் மீது நடந்த வன்கொடுமையை தடுக்க தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய பா.ஜ.க. அரசையும் டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் அதிகாரம், தமிழக மக்கள் முன்னணி, தமிழ்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.