தென்காசியில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-11-01 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பா.ஜனதா பெண் தலைவர்கள் குறித்து தி.மு.க. நிர்வாகி அவதூறாக பேசியதை கண்டித்து சென்னையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி அவரை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் பா.ஜனதா நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் அங்கு மறியல் செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையொட்டி அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பா.ஜனதா நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து பேரணியாக சென்று பாலத்தின் அடியில் நின்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், மகளிர் அணி தீபா, மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், செந்தில்குமார், மண்டல தலைவர் மேகநாதன், வக்கீல் சிவசூரிய நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தென்காசியில் நேற்று இரவு பழைய பஸ் நிலையம் அருகில் மற்றும் குத்துக்கல்வலசை ஆகிய பகுதிகளில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர பா.ஜ.க. தலைவர் மந்திரமூர்த்தி, நகர்மன்ற கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கருப்பசாமி மற்றும் நிர்வாகி ராஜ்குமார் உள்பட 22 பேர் கலந்து கொண்டனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்திருந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு போலீசார் விடுதலை செய்தனர்.

கடையநல்லூர்

கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச்செயலாளர் காளிராஜ், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலப்பிரிவு தலைவர் பாளீஸ்வரன், நகர துணைத்தலைவர் கவுன்சிலர் சங்கரநாராயணன், ஒன்றிய தலைவர் தர்மர், இந்து முன்னணி சிவா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்குறிச்சி

ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆழ்வார்குறிச்சி நகர கழகம் சார்பாக கடையம் கிழக்கு ஒன்றியத்திய தலைவர் ரத்தினகுமார் தலைமையில், கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் முருகேசன் முன்னிலையில், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட கலை சாரா பிரிவு செயலாளர் அருண்ராஜ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மேற்கு ஒன்றிய பொருளாளர் காக்கும்பெருமாள், மற்றும் கட்சியின் பிரிவு தலைவர்கள் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் இரவில் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் வேம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ், ஓ.பி.சி. மாவட்டத் தலைவர் மாரியப்பன், நகர பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட அமைப்பு சேரா பிரிவு துணைத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட அரசு தொடர்பு பிரிவு துணைத் தலைவர் சீனிவாசன், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் முருகன், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர்கள் குருசாமி, முத்துமாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், பொன்னு லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்