பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-17 20:02 GMT

பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யு.மான கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், ஓ.பி.சி. அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கத்தை விடுதலை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்